இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறியது ஆம் ஆத்மி!

 
ச் ச்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியிலிருந்து தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி ,இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை. அனைத்து மாநிலங்களிலும் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளோம். 2024 மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இந்தியா உடன் கூட்டணி வைத்தோம்” என்றார்.

ஏற்கனவே 2025ம் ஆண்டு பிப்ரவரி டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே களம் கண்டது ஆம் ஆத்மி. நாளை இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி ,இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.