மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு..

 
அமைச்சர் அதிஷி

டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உறுதி செய்த அதிகாரத்தை அவசரச் சட்டத்தின்மூலம்  ஒன்றிய அரசு பறித்துள்ளதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  

தலைநகர் டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இட மாற்றத்தில்  மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என  தீர்ப்பு வழங்கியது.   மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும் என்றும், துணைநிலை ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைபடியே செயல்பட வேண்டும் என்றும்,  மாநில அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் அதிஷி

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய அரசு பறித்துக்கொண்டுள்ளது.  உச்சநீதிமன்றம் பிறப்புத்த உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திர அவரச சட்டம் இன்றை கொண்டுள்ளது. நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்.

 கெஜ்ரிவால் அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள். டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.