"வீட்டுல இருந்த 5 பேரையும் சுட்டுடேன்"- போலீசாரிடம் வந்து சரண் அடைந்த இளைஞர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளைஞர் ஐந்து பேரை கூட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் பேரு மாலை என்ற பகுதியைச் சேர்ந்த அஃபான் (வயது 23). இன்று இரவு காவல் நிலையத்திற்கு வந்து தான் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை கொலை செய்து வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, கொலையாளியின் தம்பி அப்ஷான், கொலையாளியின் பெண் நண்பர் பர்ஷானா, பாட்டி (அப்பாவின் அம்மா) சல்மா பீபி, அப்பாவின் சகோதரர் லத்தீப் மற்றும் அவரது மனைவி ஷாகிதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர்
கொலையாளியின் அம்மா செமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தனக்கு 75 லட்சம் ரூபாய் கடன் இருப்பதால் இந்த கொலைகளை செய்தேன் என்றும் தான் பூச்சி மருந்து குடித்து இருப்பதாகவும் ஆஃபான் கூறினார். இதை தொடர்ந்து கொலையாளி அஃபான் திருவந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.