மது போதையில் மின் கம்பத்தில் ஏறி தூக்கம் போட்ட இளைஞர்

 
ச்

மது போதையில் மின் கம்பத்தில் ஏறி தூக்கம் போட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டம் சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. மதுவிற்கு அடிமையான வெங்கண்ணா நேற்று முழுவதும் தொடர்ந்து மது அருந்திய நிலையில் புத்தாண்டை மேலும் மது குடித்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக  அவரிடம் பணம் இல்லாததால் மது குடிக்க பணம் தேவை என்று தன்னுடைய தாயிடம் பணம் கேட்டிருக்கிறார் வெங்கண்ணா. ஆனால் அவருடைய தாய் பணம் கொடுக்கவில்லை.இதனால் தாயை மிரட்டி பணம் வாங்க முடிவு செய்த வெங்கண்ணா அங்கிருந்த மின்சார கம்பத்தில் வேகமாக ஏறினார். 

வெங்கண்ணா மின்கம்பத்தில் வேகமாக ஏறுவதை பார்த்த கிராம இளைஞர்கள் உடனடியாக மின் சப்ளையை துண்டித்து விட்டனர். ஆனால் வெங்கண்ணா மள, மள என்று மின்கம்பத்தில் ஏறி ஒயர்கள் மீது படுத்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள், உறவினர்கள் ஆகியோர் சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின் மது குடிக்க பணம் கொடுக்கிறோம் என்று உறுதி  அளித்து வெங்கண்ணாவை கீழே இறங்க செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.