அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர் பலி

 
Accident

கர்நாடகாவில் வளைவில் தனியார் பேருந்து அதிவேகமாக திரும்பியபோது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நடத்துனர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் நான்தூர் என்ற பகுதியில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று வேகமாக வளைவு ஒன்றில் திரும்பியது. அப்பொழுது பேருந்து படிக்கட்டில் நின்று கொண்டிருந்த 23 வயதான குரு என்ற நடத்துனர் நிலை தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். 

நடத்துனர் பேருந்தில் இருந்து கீழே விழும் காட்சி அருகில் இருந்த கார் ஒன்றின் டாஷ்போர்டு கேமராவில் பதிவாகி உள்ளது. சாலையில் விழுந்த ஓட்டுநர் தலையில் காயம் அடைந்த நிலையில், அவர் கீழே விழுந்தவுடன் அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். நடத்துநர் மரணம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.