கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண் ஜீவனாம்சம் கோர முடியாது - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 
s

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும், பொருளாதார ரீதியாக சுதந்திரமான மனைவி, அவர் ஒரு பெண் என்பதால் மட்டுமே ஜீவனாம்சம் கோர முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனைவியை விட குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்று கூறி, மாதம் ரூ.20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் கணவருக்கு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், மனைவி பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும்போதும், மனைவியின் வருமானம் கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும்போதும், குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற வேறு எந்தப் பொறுப்புகளும் மனைவியின் மீது இல்லாதபட்சத்தில், பெண்களை ஆண்கள் தான் பராமரிக்க வேண்டும் என்றோ அல்லது மனைவியை அவளது கணவர் தான் பராமரிக்க வேண்டும் என்றோ கூறி, ஜீவனாம்சம் வழங்கி நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.  கணவரின் தகுதிக்கேற்ப தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள மனைவிக்கு நிதி ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே, நீதிமன்றங்கள் இடைக்கால அல்லது இறுதித் ஜீவனாம்சத்தை வழங்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

2024-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், இரண்டு மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் மனைவி தனது கடன்கள் தொடர்பான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால், திருமணத்திற்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாதத்திற்கு சுமார் ரூ.1.64 லட்சம் மனைவியும், சுமார் ரூ.60,000 கணவனும் சம்பாதிப்பதையும்  நீதிபதி சுமலதா சுட்டிக்காட்டினார்.