“வா ஒன்னா சாகலாம்..”- சண்டையில் காதலன் சட்டையையும் பிடித்து 7-வது மாடியில் இருந்து குதித்த பெண்
பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் தனியார் விடுதியின் 7-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் மென்பொறியாளர் ஜனனி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் வைட்ஃபீல்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்த 23 வயது ஜனனி சொசைட்டி ஜெனரல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். புதுச்சேரி மாவட்டம் உலைவாய்க்கலைச் சேர்ந்த இவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வைட்ஃபீல்டின் ஈ.சி.சி. சாலையில் உள்ள மவுண்டன் பி.ஜி.யில் தங்கியிருந்தார். அவரும், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மணிச்சவேலு என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மணிச்சவேலுவின் சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள நல்லத்தூர் என்பது தெரியவந்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஜனனி கட்டிடத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து குதிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர் உடன் மணிச்சவேலுவையும் தன்னுடன் இழுத்ததால், இருவரும் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஜனனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் மணிச்சவேலு படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

