பிரபல நடிகரை தாக்கிய சிங்கம்- வீடியோ வைரல்
கன்னட நடிகர் கிரண் ராஜ் சஃபாரியின் போது சிங்கத்தால் தாக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கிரண் ராஜ் அந்த வீடியோவை, "சிங்கத்திற்குப் பயிற்சி அளிக்கக் கற்றுக்கொள்ளும் முதல் நாள்" என்ற தலைப்புடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரோஜர் மற்றும் ராக்கி என்ற இரண்டு சிங்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவற்றுடன் நட்பு கொள்ள விரும்புவதாக நடிகர் கூறுகிறார். அந்த வீடியோவில், சிங்கங்களில் ஒன்று நடிகரைக் கீழே தள்ளுவது போல் தோன்றுவதால், ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
A video showing Kannada actor Kiran Raj being attacked by a lion during a safari has gone viral on social media, leaving fans concerned about his safety.
— Hate Detector 🔍 (@HateDetectors) September 8, 2026
Kiran Raj shared the video on social media with the caption, “First day of learning how to train a lion.”
The video features… pic.twitter.com/l1PswboXhA
கிரண் ராஜ், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். "நான் பாதுகாப்பாக இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம். நான் பாதுகாப்பாக இல்லாவிட்டால், இதை என்னால் பதிவிட்டிருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். நடிகரின் இந்த பதிவிற்கு நெகட்டிவான கமெண்ட்ஸ்களும் வந்துள்ளன. பல ரசிகர்கள் காட்டு விலங்குகளுக்கு அருகில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களைச் செய்ய வேண்டாம் என்று அவரை எச்சரித்துள்ளனர்.

