“மறுபிறவி மீது நம்பிக்கை”- 4 ஆண்டுகளாக Freezer Box-ல் வைக்கப்பட்ட முதியவரின் உடல்

 
“மறுபிறவி மீது நம்பிக்கை”- 4 ஆண்டுகளாக  Freezer Box-ல் வைக்கப்பட்ட முதியவரின் உடல்

மும்பையில் 2022-ஆம் ஆண்டு இறந்த 80 வயது முதியவரின் உடல் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவ மையத்தின் Freezer Box-இல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மாநிலம் குராரில் காப்பகத்தில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில், 80 வயதான முதியவர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. மறுபிறவியில் நம்பிக்கை கொண்டதாகக் கூறப்படும் அவரது மகள், குடும்பத்தினர் மாதந்தோறும் ரூ.1.6 லட்சம் செலுத்தி, தந்தையின் உடலைப் பாதுகாக்க உதவியதாகக் கூறப்படுகிறது. அந்த முதியவர், 2022 ஜூன் 9ஆம் தேதி புற்றுநோயால் இறந்தார். மறுபிறவி மீது நம்பிக்கை கொண்ட அந்த முதியவரின் மகள், அமெரிக்கவில் மனித உடல்களை உறைநிலையில் பாதுகாக்கும் மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டு உடலை பாதுகாத்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் அந்த மகள், அவரது தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததாகவும், மறுப்பிறவி என்ற கோட்பாட்டை நம்பியதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அந்த மருத்துவ மையம் மூடப்பட்டதில் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து முதியவரின் உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலம் அந்தச் சடலம் எப்படி மையத்திற்குள் இருந்தது மற்றும் அதிகாரிகள் அந்த வளாகத்தை முறையாக ஆய்வு செய்தார்களா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், உறவினர்கள் அந்த நபரின் இறப்புச் சான்றிதழையும், பிருஹன்மும்பை மாநகராட்சியில் (பிஎம்சி) சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் காவல்துறையிடம் வழங்கியுள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் அந்த காப்பகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.