இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்!

 
Parliament

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்  இன்று கூடுகிறது. 

Parliament

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 22ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.  இந்த கூட்டத்தொடரில் நிகழ்ச்சிக்கான நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள்  கண்டனம் தெரிவித்தனர்.  சிறப்பு கூட்ட தொடரில் முதல் நாள் நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்திலும் எஞ்சிய நான்கு நாட்கள் புதிய கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. 

Parliament

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத்  ஜோஷி பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழு புகைப்படம் எடுக்கப்படும் எனவும் புதிய கட்டிடத்திற்கு அனைவரும் செல்வோம் என்றும் கூறியுள்ளார்.