பிரதமராக மோடி பதவி ஏற்பதில் சிறு மாற்றம்

 
மோடி

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு பதவி ஏற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இருப்பினும்  தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு பதவி ஏற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.