மோடி பதவியேற்ற 24 மணி நேரத்தில் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகி மீது பாலியல் புகார்

 
பாஜகவின் IT பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா மீது RSS உறுப்பினர் சாந்தனு சின்ஹா பாலியல் புகார்!

பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

BJP Amit Malviya Seeks Apology For False And Derogatory Post

பாஜகவின் IT பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா மீது RSS உறுப்பினர் சாந்தனு சின்ஹா பாலியல் புகார் எழுந்துள்ளது. மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநில பாஜக பார்வையாளராக இருந்த அமித் மாளவியா, பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அமித் மாளவியா மீது RSS உறுப்பினரே பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 


5 நட்சத்திர ஓட்டல் மட்டுமல்ல மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகத்திலேயே பெண்களிடம் அமித் மாளவியா அத்துமீறியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.