70 வயதிலும் ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடும் கேரள தம்பதியினர்.. வாரம் ரூ.45 ஆயிரம் வரை வருமானம்

 

70 வயதிலும் ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடும் கேரள தம்பதியினர்.. வாரம் ரூ.45 ஆயிரம் வரை வருமானம்

கேரளாவை சேர்ந்த அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற தம்பதியினர் தங்களது ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடுகின்றனர். இதன் வாயிலாக வாரத்துக்கு ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தம்பதியினர் பி.தங்கமணி-ஏ.நாராயணன். இவர்கள் 70 வயதிலும் தங்களது பண்ணையில் விவசாயம் செய்து ஓய்வு காலத்தை சந்தோஷமாக கழித்து வருகின்றனர். வித விதமான காய்கறிகள் மற்றும் பழங்களை பண்ணையில் சாகுபடி செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாராயணன் கூறியதாவது: கேரள அரசு போக்குவரத்தில் நடத்துனராக பணியாற்றி வந்த நான் கடந்த 2002ம் ஆண்டு பணியிலிருந்து ஒய்வு பெற்றேன். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த எனது மனைவி 2005ம் ஆண்டு ஓய்வு பெற்றாள்.

70 வயதிலும் ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடும் கேரள தம்பதியினர்.. வாரம் ரூ.45 ஆயிரம் வரை வருமானம்
பி.தங்கமணி-ஏ.நாராயணன்

நான் சிறு வயது முதலே எனது வீட்டில் பயிர்கள் பயிரிடுவதில் ஆர்வமாக செயல்பட்டேன். ஆகையால் ஓய்வு பெறுவதற்கு முன் எனது ஓய்வு காலத்தை பயிர்களை சாகுபடி செய்வதில் பயன்படுத்த முடிவு செய்தேன். இதற்காக 7.5 நிலத்தை வாங்கினோம். 2013ம் ஆண்டில் பயிர் சாகுபடியை தொடங்கினோம். தற்போது எங்களது பிரகிருதி கேஷ்த்ரம் வேளாண் பண்ணையில் பல்வேறு விதமான பழ மரங்கள், காய்கறிகள் உள்ளன.பண்ணையில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வது வாயிலாக வாரந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.

70 வயதிலும் ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடும் கேரள தம்பதியினர்.. வாரம் ரூ.45 ஆயிரம் வரை வருமானம்
ஏ.நாராயணன்

எங்களுக்கு தெரியாத நபர்களுக்கு பண்ணையில் விளைந்த பொருட்களை விற்பனை செய்ய விரும்பமாட்டேன். காய்கறிகள், பழங்கள் வாங்க விரும்புவர்கள் அதை பஸ் ஸ்டாண்டில் வாங்கலாம் அல்லது வீட்டுக்கு வந்து என்னிடம் வாங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.நாராயணன்-தங்கமணி தம்பதியினர் பண்ணையில் உதவிக்காக 2 நபர்களை மட்டுமே வேலை வைத்துள்ளனர். பெரும்பாலான பணிகளை அவர்களே செய்து விடுகின்றனர். நாராயணன் தம்பதியினருக்கு 2 மகள்கள் அவர்கள் இருவரும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் விடுமுறையில் மட்டும் இங்கு வந்து பெற்றோர்களுடன் தங்கி விட்டு செல்வார்கள்.