சல்பர், ஆக்சிஜன் இருக்கு! ஹைட்ரஜனை தேடும் ரோவர்

 
நிலவின் மேற்பரப்பில் நகரத் துவங்கியது ரோவர்- இஸ்ரோ புது தகவல்

நிலவில் ஆக்சிஜன், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவில் ஆக்சிஜன், சல்பர் தனிமங்களை கண்டுபிடித்த சந்திரயான் 3 ரோவர் : வாயடைத்து போன உலக நாடுகள்!!! - Update News 360


நிலவில் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய  இஸ்ரோவின் சார்பில்  சந்திரயான் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் ஆக. 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.  பூமியிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில், 36, 500 கிலோ மீட்டர் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் செயற்கைக்கோள், புரோபல்ஷன் மாடூய்ல் என்ற புதிய உந்து விசை இயந்திரம் மூலம் நீள்வட்டப்பாதை  அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆக.1-ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -3 செயற்கைக்கோள் ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தது. தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் அதன் உயரத்தை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. இலக்கை நோக்கி பயணித்த சந்திரயான் -3 செயற்கைக்கோள் ஆக.23ம் தேதி திட்டமிட்டபடி, மாலை 6.02 மணிக்கு தரையிறங்கியது. 

இந்நிலையில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டுவருவதாக தெரிவித்துள்ள இஸ்ரோ, நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர், அலுமினியம்,
கால்சியம், இரும்பு, மேங்கனீஸ், குரோமியம், டைடானியம், சிலிக்கான், ஆக்ஸிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்ததுள்ளதாக கூறியுள்ளது. மேலும் பிரக்யான் ரோவர் ஹைட்ரஜனை தேடி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவியே நிலவில் உள்ள தனிமங்களை கண்டறிந்துவருவதாகவும் இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.