திடீரென சரிந்து விழுந்த மேடை! கூலாக இருந்த ராகுல்காந்தி

 
ராகுல்காந்தி

பீகாரின் பாலிகஞ்ச் பகுதியில் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடை அடுத்தடுத்து இருமுறை சரிந்தது. இருப்பினும் ராகுல்காந்தி, மேடையில் இருந்தபடியே கூலாக தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.

பீகார் மாநிலம் பாலிகஞ்ச்சில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மேடையில் ஏறினார். அப்போது திடீரென மேடை உடைந்து விழுந்ததால் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


உடனே சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேடையில் இருந்து கீழே இறங்கி சென்றார். அப்போது சிறிதும் சலசலப்பு இன்றி, மேடையில் இருந்தபடியே ராகுல்காந்தி, கூலாக தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.