"ஒரு ஃபோன் பண்ணிக்கிறேங்க.." நம்பி போனை கொடுத்த மளிகை கடைக்காரர்- ரூ.90 ஆயிரத்தை இழந்த சோகம்

தெலுங்கானாவில் மளிகை கடையில் மளிகை சாமான் வாங்குவதாக வந்து கடை உரிமையாளரிடம் வீட்டிற்கு போன் செய்து தருவதாக போன் வாங்கி ரூ.90 ஆயிரம் பணத்தை போன் பே செய்து கொண்ட மர்ம நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தெலங்கனா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நகிரேகல் நகரில் ராதா கிஷன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரிடம் இன்று காலை மளிகை பொருட்களை வாங்க வந்த அடையாளம் தெரியாத ஒருவர் கடை உரிமையாளர் ராதா கிஷனிடம் வீட்டில் உள்ளவர்களிடம் மேலும் வேறு என்ன வேண்டும் என போன் செய்து கேட்டு பட்டியல் தருவதாக கூறி அவரது போனை பெற்றார். இதனை உண்மை என நம்பிய ராதா கிஷன் அவரது போனை வழங்கி மற்றவர்களுக்கு பொருட்களை வழங்கி கொண்டுருந்தார். அதற்குள் ராதா கிஷன் போன் பேவில் இருந்து பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கணக்கிற்கு மூன்று முறை ₹ 90 ஆயிரம் பணம் அனுப்பி பைல்ட் ஆன நிலையில் நான்காவது முறை பணம் அனுப்பி கொண்டு வீட்டில் உள்ளவர்கள் போன் எடுக்கவில்லை நேரில் சென்று மளிகை பொருட்கள் பட்டியல் வாங்கி வருவதாக கூறி போனை வழங்கி சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து ராதா கிஷன் மனைவி கடைக்கு வந்து போனை பார்த்தபோது போன் பே மூலம் ரூ.90 ஆயிரம் பணம் யாருக்கு அனுப்பியது என்று கேட்டப்பிறகே அவருக்கு தெரிந்தது. இதனையடுத்து நகிரேகல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பணம் மாற்றப்பட்ட வங்கியில் பணத்தை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.