தன்னை தாக்கிய சிறுத்தையை வெட்டிக் கொன்ற கூலித்தொழிலாளி

 
சிறுத்தை

கேரள மாநிலம் இடுக்கியில் தன்னை தாக்கிய சிறுத்தை புலியை தற்காப்புக்காக வெட்டிக்கொண்ற கூலித்தொழிலாளியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கைகொடுத்த அரிவாள்

கேரள மாநிலம் இடுக்கி மாங்குளம் என்ற இடத்தில் தன்னை தாக்கி காயப்படுத்திய சிறுத்தை புலியை தற்காப்புக்காக வெட்டிக்கொன்ற தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கேரள வனத்துறை அமைச்சர் வனத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூலி தொழிலாளி கோபால் கூறும் பொழுது, “தன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்கு சாலையில் நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது இரண்டு ஆடுகளை காயப்படுத்தியும் அதேபோல ஒரு கோழியை கொன்று தின்றுவிட்டு சாலையின் ஓரத்தில் படுத்திருந்த சிறுத்தை புலி தான் சாலையில் நடந்து செல்லும் பொழுது தன் மீது பாய்ந்து தாக்கியது. நான்  நிலை தடுமாறி கீழே விழுந்த விட்டேன். என் மீது புலி ஆக்ரோஷமாக பாய்ந்தது. இதில் எனக்கு காயங்கள் ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு திடீரென்று தன்னுடைய கையில் அரிவாள் இருப்பது நினைவுக்கு வந்தது. உடனடியாக என்னை தற்காத்துக் கொள்வதற்காக அந்த அரிவாளை எடுத்து புலியின் கழுத்தில் வெட்டினேன். இதில் புலி உயிரிழந்து விட்டது” என்று கூறினார்.

பலத்த காயம் அடைந்த கோபாலன் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த புலியின் மருத்துவ உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு வனத்துறையினர் புதைத்தனர்.