திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம்

 
ds

திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

  உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தலையில் பேரிடியை இறக்கி உள்ளது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் நேரில் ஆஜராக வேண்டும் என தொடங்கி பல கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகே உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட தூணில் விளக்கேற்ற உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இருப்பினும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் அரசியலமைப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அறங்காவலர் குழுவினர் திட்டமிட்டே உச்சநீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாளை திருப்பரங்குமன்றம் கல்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வில், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு யாருக்கும் சாதகமாக பிறப்பிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம் என்றும் கூறியுள்ளது.