மகனை கொலை செய்து தலைமரைவாக இருந்தவர் 26 ஆண்டுகளுக்கு பின் கைது

 
ட்ஹ்

மகனை கொலை செய்து 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் மகள் திருமணத்தால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம்  ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், மடகசிரா தொகுதிக்குட்பட்ட குடிபண்டா மண்டலம் திண்ணேஹட்டியைச் சேர்ந்த திப்பேசுவாமி என்பவர் 1998ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தனது சொந்த 6 மாத  மகனைக் கழுத்தை நெரித்து  கொன்று புதைத்தார்.  இந்த கொலைக்கு மனைவி மீது அவருக்கு இருந்த சந்தேகமே காரணம் என போலீசார் உறுதி செய்தனர். இந்த கொலைக்கு பிறகு   திப்பேசாமியின் மனைவி புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதையடுத்து திப்பேசாமி தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில்  மகனைக் கொன்ற பிறகு திப்பேசுவாமி கர்நாடகாவுக்குத் தப்பிச் சென்றார்.  அங்கு தனது பெயரை கிருஷ்ணா கவுட் என்று மாற்றிக் கொண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்ம் அவர்களில் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்த திப்பேசுவாமி என்ற கிருஷ்ணா கவுட்டை  திருமண பத்திரிக்கையை திண்ணைஹட்டியில் உள்ள தனது நண்பர் நாகராஜுக்கு  அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக இந்த கொலை வழக்கை எப்படியாவது தீர்க்க  வேண்டும் என்று போலீசார் இருந்த நிலையில்   போலீசாருக்கு நாகராஜூ வீட்டிற்கு திப்பேசாமி போட்டோவுடன் கூடிய திருமண பத்திரிக்கை வந்ததை அறிந்த போலீசார்  நாகராஜ் வீட்டில் சோதனை நடத்தினர்.  சோதனையின் போது ​​திருமண பத்திரிக்கை கிடைத்தது.  அந்த திருமணப் பத்திரிக்கையில் திப்பேசுவாமியின் போட்டோவை பார்த்த போலீஸார், கையில் பத்திரிகையுடன் நேராக திப்பேசாமியின் வீட்டுக்குச் சென்றனர்.  உங்களை கைது செய்வதாக கூறி  நேரடியாகக்  போலீசார் திப்பேசாமியை கைது செய்தனர்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு திப்பேசாமியை போலீசார் கண்டுபிடித்து கைது செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  ​​​​தனது மகனைக் கொன்று, அவரது மகளுக்கு திருமணம் நடத்த இருந்த நிலையில் கொலை வழக்கின் விசாரணை இறுதியாக முடிவுக்கு கொண்டு வந்து வழக்கை தீர்த்து வைத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசு தொகையை உயர் அதிகாரிகள் அறிவித்தனர்.