காருக்குள் சாவியுடன் சிக்கிய குழந்தை! அதன்பின் நடந்த சம்பவம்

 
குழந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெங்கனூர் என்ற இடத்தில் இன்று காலை சாவியுடன் காருக்குள் ஏறிய சிறுவன் உள்ளே சிக்கிக் கொண்டான் காரின் கதவு திறக்க முடியாததால் பெற்றோர் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இன்று காலை 9 மணி அளவில் வீட்டின் போர்டிகோவில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தை அங்கிருந்து சாவியை எடுத்துக்கொண்டு காருக்குள் ஏறி உள்ளே சென்றதும் கார் கதவுகள் மூடியது. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த குழந்தையின் பெற்றோர் கதவை திறக்க முயற்சித்த போது திறக்க முடியவில்லை. இது குறித்து விழிஞ்ஞம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி குழந்தையை பத்திரமாக காருக்குள்ள இருந்து வெளியே எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

போர்டிகோவில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று தேடிய போது தான் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்ட விவரம் பெற்றோருக்கு தெரிய வர உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் அளித்து குழந்தையை மீட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.