மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு

 
Amit Shah

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமித் ஷா மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Amit Shah manipur
 மக்களவை தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த ஆணையம் தடை விதித்துள்ளது.  மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில்; தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும் குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம், பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்கு அனுமதியில்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் விதிமீறல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

amit shah

இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தெலங்கானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த மே.1-ம்  தேதி ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரசார வாகன பேரணியில் குழந்தைகளை பயன்படுத்தியதாக தெலங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .