ஒரு தலைக்காதால் வெறித்தனமாக மாறிய இளைஞர்! காதலியின் பெற்றோரை கொலை செய்த கொடூரம்

 
கொலை


தெலுங்கானாவில் காதலித்து திருமணம் செய்த மனைவியை பிரித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயன்ற பெற்றோரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தெலங்கானா மாநிலம் வாரங்கல்  பாதரு சிந்தல தண்டாவில் வசித்து வரும் பானோத்து ஸ்ரீனிவாஸ் (45), பானோத்து சுகுணா (40) தம்பதிக்கு தீபிகா (20) என்ற  மகளும், மதன்லால் (19) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில்  குண்டங்கா கிராமத்தை சேர்ந்த பன்னி என்ற இளைஞர் தீபிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தீபிகாவை பெற்றோர்கள் உதவியுடன் கடத்தி சென்ற பன்னி, ஐதராபாத்தில்  வைத்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் பன்னியுடன் திருமணத்தை விரும்பாத தீபிகா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை தெரிவித்தார். இதனால் கடந்த ஜனவரி மாதம், தீபிகாவின் பெற்றோர் காவல்துறையை அணுகினர்.  போலீசார், இரு தரப்பினருக்கும் கவுன்சிலிங் கொடுத்து, தீபிகாவை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து  வீட்டில் இருந்தபடி தீபிகா ஹனுமகொண்டாவில் இரண்டாம் ஆண்டு டிகிரி படித்து வருகிறார். இந்நிலையில் தீபிகா பெற்றோர், அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதை அறிந்த பன்னி வெறித்தனமாகப் மாறினான்.  இதனால்  அதிகாலை 1.30 மணிக்கு கத்தியுடன் வந்த பன்னி வீட்டில் தூங்கி கொண்டுருந்த தீபிகாவை எழுப்பி உள்ளார். இதனால் தீபிகா சத்தம் போட்டதால் அவரை கத்தியால் தாக்கினார். இதனால் இரண்டு கைகளில் தீபிகாவிற்கு காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்ட அவரது தம்பி மதன்லால் மற்றும் பெற்றோர் ஸ்ரீநிவாஸ், சுகுணா  அங்கு வந்த தடுக்க முயன்றதால் பன்னி அவர்களையும் கண்முடித்தனமாக கத்தியால் தாக்கினார். இதில் சுகுணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஸ்ரீநிவாஸ் பலத்த காயமடைந்தார்.  இதை பார்த்த குடும்பத்தினர் அவரை நர்சம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீநிவாசும் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

Warangal: ఉన్మాదిగా మారిన యువకుడు.. ప్రేమ వివాహాన్ని కాదన్నందుకు దంపతుల దారుణ  హత్య | husband-and-wife-murdered-in-warangal-dist

பன்னி தாக்கியதில் தீபிகா மற்றும் அவரது சகோதரர் மதன்லால் ஆகியோரும் காயமடைந்தனர்.  அவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுமகொண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இச்சம்பவம் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து நர்சம்பேட்டை ஏசிபி கிரண்குமார், நெக்கொண்டா இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், சென்னராவ், கூடுரு மற்றும் நெக்கொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராமத்தில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தப்பி ஓடிய  பன்னியை தேடி வருகின்றனர்

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீபிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பன்னி என்பவன் யார் என்று எனக்கு தெரியாது என்னை காதலிப்பதாக கூறி என்னை கடத்தி சென்று ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டான். இதற்கு 3,500 பணம் பெற்றுக்கொண்டு போலீசாரே என்னை அவனுடன் அனுப்பி வைத்தனர். எனது நிலையை பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து பெற்றோர் போலீசார் உதவியுடன் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிலேயே பெற்றோருடன் இருந்து வந்தேன். இந்நிலையில் கத்தியுடன் வந்த பன்னி என்னை கத்தியால் தாக்கினான். தடுக்க வந்த எனது தம்பியையும் பெற்றோரையும் கண்முடி தனமாக வெட்டினான். இதில் பெற்றோர் இருவரும் இறந்து விட்டனர்” என்றார்.