சுடுகாட்டில் எரியும் பிணத்திலிருந்து உடல் உறுப்புகளை 'சுட சுட' சாப்பிடும் ’அகோரி’- பதறவைக்கும் வீடியோ

 
சுடுகாட்டில் எரியும் பிணத்திலிருந்து உடல் உறுப்புகளை சுட சுட எடுத்து சாப்பிடும் ’அகோரி’- பதறவைக்கும் வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 27 வயதான அகோரி சுடுகாட்டில் எரியும் பிணத்திலிருந்து உடல் உறுப்புகளை சாப்பிடும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.


தன்னை ‘அகோரி’ என சொல்லிக் கொண்டு உஜ்ஜைனில் வலம்வருபவர் திருநங்கை காளி நந்த் கிரி(27). இவர் உஜ்ஜைனில் உள்ள சக்ரதீர்த்த சுடுகாட்டிற்கு வாளுடன் வலம் வருவதுபோன்ற காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், காளி மந்திரங்களை உச்சரித்துவிட்டு, எரியும் பிணத்தின் உடலில் வாளைக் குத்தி, அதிலிருந்து ஒரு பொருளை எடுத்து சாப்பிடுகிறார். அந்தப் பொருள் "சூடாகவும் சுவையாகவும்" இருந்ததாக அவர் விவரித்துள்ளார். இந்து மதத் தலைவர்கள் இந்தச் செயலைக் கண்டித்து புகார் அளித்துள்ளனர்.  அகோரியின் செயல்கள் இந்து மதத்தைக் களங்கப்படுத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இதையடுத்து ந்தத் திருநங்கை மீது பிஎன்எஸ் பிரிவு 301-ன் கீழ் (புதைக்கப்பட்ட இடங்களில் அத்துமீறி நுழைதல் மற்றும் மனித எச்சங்களுக்கு அவமதிப்பு செய்தல்) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து திருநங்கை காளி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனத்தில் அதிக எண்ணிக்கையிலான மனித மண்டை ஓடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிரி 2015-ல் திருநங்கை சமூகத்தினரால் நிறுவப்பட்ட கின்னார் அகாராவில் ஒரு உறுப்பினராக உள்ளார். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, அகில இந்திய அகாரா கவுன்சிலால் கிரிக்கு கின்னார் அகாராவின் மகா மண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் பல சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து அந்தப் பட்டம் திரும்பப் பெறப்பட்டது. 27 வயதான இவர், தெலங்கானாவின் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர். துறவறத்தைப் பின்பற்றுவதற்காக இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய இவர், நாட்டின் முதல் திருநங்கை அகோரி என்றும் கூறிக்கொள்கிறார். மேலும், இவர் நாடு முழுவதும் பயணம் செய்துள்ளதாகவும், இவருக்கு 18 மொழிகள் பேசத் தெரியும் என்றும் கூறப்படுகிறது.