இறந்த காதலியை திருமணம் செய்த இளைஞர் - அசாமில் நெகிழ்ச்சி சம்பவம்

 
assam couple

அசாம் மாநிலத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த காதலியை திருமணம் செய்த காதலனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான பிடுபன் என்ற இளைஞரும், பிரத்தனா போரா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் இருவீட்டாருக்கு தெரிய வந்த நிலையில், அவர்களது பெற்றோர்  இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர்  பிரத்தனா போராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் காதலியின் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுதான். இருந்த போதிலும் தனது காதலியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என எண்ணி, தனது காதலியின் இறப்பு சடங்கிற்கு வந்து அனைவரது முன்னிலையில் உயிரிழந்த காதலியின் சடலத்திற்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார். மேலும், தனது மனைவி நீ மட்டும் தான் என்றும் வாழ்க்கை முழுவதும் உன்னை மட்டும் நினைத்துக்கொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கப்போவதாகவும் தனது காதலியின் சடலத்தின் மீது சத்தியம் செய்தார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.