அந்தரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த இளைஞர்கள்! வைரலாகும் வீடியோ

 
s

 நான்கைந்து பேர் கொண்ட இளைஞர் கும்பல் சுற்றிலும் நின்று கொண்டு ஒரு இளைஞரை தலைகீழாக மரத்தில் கட்டி தொங்க விட்டு கொடூரமாக தாக்குகிறார்கள்.  இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.  

 இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது எந்த பகுதியில் நடந்த சம்பவம் என்பது குறித்து பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர் .    இந்த நிலையில் இந்த சம்பவம் சத்தீஷ்கார் மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

o

 மரத்தில் தலைகீழாக கட்டி தாக்கப்பட்ட அந்த நபர் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த மகாவீர் என்பதும் அவர் சிபாட் நகரில் இருக்கும் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.   மகாவீர் அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

 சில தினங்களுக்கு முன்பாக மனிஷ் என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றிருக்கிறார்.  அப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டிருக்கிறார் மகாவீர். போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்து மகாவீரை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள்.  ஆனால் திரும்பவும் மகாவீர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

 இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மகாவீரை பிடித்து மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கொடூரமாக அடித்துள்ளனர்.   இதை பார்த்த பெண் ஒருவர் போலீசாருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.  அவர் கொடுத்த புகாரின் பேரில் தான் போலீசார் விரைந்து வந்து மகாவீரை மரத்தில் கட்டி தொங்க விட்டு அடித்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.