திருமணத்தில் ஆடி, பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென சுருண்டுவிழுந்து மரணம்

 
dance

ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மண பெண்ணின் தோழி திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹாவன்ஜே என்ற பகுதியில் தனது நெருங்கிய தோழியின் திருமணத்தில் 23 வயதான ஜோஸ்னா லூவிஸ் என்ற பெண்மணி கலந்து கொண்டார். மணப்பெண்ணை வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதற்காக நேற்று இரவு ஜோஸ்னா நன்கு அலங்காரம் செய்து கொண்டு மணப்பெண்ணுடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் மேடைக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக திருமண வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு மருத்துவர்கள் ஜோஸ்னா மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டார் ஜோஸ்னா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, அவரது உடலை அவர்கள் சொந்த ஊரான குந்தாபுராவிற்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஜோஸ்னா உயிரிழப்பதற்கு முன்பு மிகவும் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் அவருக்கு எந்தவித நோயும் இருக்கவில்லை என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பாக பிரம்மாவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.