விபச்சார வழக்கில் இளம் நடிகர் கைது

 
க்

விபச்சார வழக்கில் இளம் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளதால்  கன்னட திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அழகான இளம் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எல்லாம் எடுத்து சிலர் அதை போலியாக விபச்சார செயலியில் சேர்த்து இளைஞர்களுக்கு பகிர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  

ச

 இது குறித்து போலீசாருக்கு நிறைய புகார்கள்  பறந்து இருக்கின்றன.   இதனால் பெங்களூரு சுத்தகுண்டே பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.  விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட சஞ்சு,  மோகன்,   ராஜேஷ் அனுமேஷ், மஞ்சுநாத் , மல்லிகார்ஜுன் என்கிற ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட இந்த ஆறு பேரில் சஞ்சு என்பவர் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.   திரைப்படங்களில் நடித்தாலும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

 சமூக வலைத்தளங்களில் இருந்து இளம் பெண்களின் புகைப்படங்களை எடுத்து விபச்சார செயலியை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது இவர்களிடம் நடத்திய விசாரணையில் உண்மை என்று தெரிய வந்திருக்கிறது.   அந்த புகைப்படங்களை உண்மை என்று நம்பி இந்த ஆறு பேரிடமும் வாலிபர்கள்,  இளைஞர்கள் அணுகி பணத்தை இழந்துள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது .  இதை அடுத்து விபச்சார மோசடி வழக்கில் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர் போலீசார்.

 விபச்சார வழக்கில் இளம் நடிகர் ஒருவர் கைதாகி இருப்பது கன்னட திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.