ஆந்திர எம்பியின் உதவியாளர் அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்தது ஏன்?

 
as

அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்த ஆந்திர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  ஆந்திர எம்பியின் உதவியாளர் ஏன் அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்தார் என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  தலைமையிலான சிவசேனா  அதிருப்தி குழு- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் மகாராஷ்டிராவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இருந்தார்.   அந்த இரண்டு நாள் பயணத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒருவர் பாதுகாப்பு அதிகாரி போல இருந்திருக்கிறார்.

as

 மத்திய உள்துறை அமைச்சகத்தின் அடையாள அட்டையும் அவர் அணிந்திருந்திருக்கிறார் .  இரண்டு நாள் பயணத்தின் போது சில நிகழ்வுகளில் அமித்ஷாவுக்கு அருகிலும் அவர் இருந்திருக்கிறார். 

 அப்போது அமித்ஷாவின் மற்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அந்த நபர் குறித்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அமித்ஷா இரண்டு நாள் பயணம் முடிந்து சென்ற பின்பும் மற்ற அதிகாரிகளுக்கு அந்த சந்தேகம் தொடர்ந்து நீடித்திருக்கிறது.   இதை அடுத்து மும்பை போலீசுக்கு அது குறித்த சந்தேகத்தை தெரிவித்துள்ளனர்.   உடனே மும்பை போலீசார் சந்தேகத்திற்கு உரிய அந்த நபரை பிடித்து விசாரித்த போது,   அவர் அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரி போல் நடித்தது தெரிய வந்திருக்கிறது.

 அவரின் பெயர் ஹேமந்த் பவார் என்பதும் தெரிய வந்திருக்கிறது .  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எம். பி. யின் உதவியாளராக அவர் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.  இதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   ஆந்திர மாநிலத்தின் எம். பி. யின் உதவியாளர் ஏன் அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்தார் என்பது குறித்து போலீசாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால்,  அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.