மேற்கு வங்கத்தில் 1.20 கோடி வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி பன்மடங்கு அதிகரிப்பு.. மம்தா பானர்ஜி பெருமிதம்

 
துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

மேற்கு வங்கத்தில் எனது தலைமையிலான அரசு, 1.20 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் முதல் கூட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். ஜனவரி 9 முதல் 11 வரை நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மை குறித்து முடிவு செய்வார்கள்.

ஜி-20 மாநாடு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: மேற்கு வங்க அரசு 1.20 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியை திரிணாமுல் காங்கிரஸ் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் என இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். 

மொத்த உள்நாட்டு உற்பத்தி

பெண்கள், விவசாயிகள், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நாங்கள் அதிகாரம் அளித்தோம். எங்களின் வளர்ச்சி முயற்சிகளின் பலன்களை பெறுவதை செய்வதற்காக உங்கள் வீட்டு வாசலில் அரசு (துவாரே சர்க்கார்) திட்டத்தை தொடங்கினோம். இந்த திட்டம் தேசிய விருதை வென்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.