நல்ல மனநிலையில் இருக்கிறேன், அதை பற்றி கேட்காதீங்க.. வந்தே பாரத் ரயில் மீதான தாக்குதல் குறித்து பேச மறுத்த மம்தா

 
துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை பற்றி கேட்காதீங்க, நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த வாரம் பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்தது, ரயிலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல் வீச்சு தாக்குதலில் சேதமடைந்த வந்தே பாரத் ரயில்

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் மம்தா பானர்ஜி அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். செய்தியாளர்களின் கேள்விக்கு மம்தா பானர்ஜி கூறியதாவது: அதை ( வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல்) பற்றி கேட்க வேண்டாம்.

கங்கா சாகரில் புனித நீராடும் மக்கள்

நான் கங்காசாகர் மேளாவுக்கு புறப்படுகிறேன். நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன். கங்காசாகர் குறித்து எதையும் கேளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை போன்ற வடமாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி கங்காசாகர் தீவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடுவது வழக்கம்.இமயமலையல் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று வங்க கடலில் சங்கமிக்கிறது. கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது. கங்காசாகர் மேளா இம்மாதம் 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும்.