அவர் காலடி எடுத்து வச்சா பொறுத்துக்கொள்ள மாட்டோம் - அமைச்சர் ரோஜா ஆவேசம்

 
ரொ

அரசியல் ரீதியாக எங்கள் மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் காலடி எடுத்து வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் அமைச்சர் ரோஜா.

 ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா.   அவர் இன்று காலையில் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டுள்ளார்.  பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது,    ஐந்து நாள் இடைவெளியில் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் நடத்திய இரண்டு நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.  30 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.   இதற்கு கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் லோகேஷ் இருவருமே முழு பொறுப்பு என்றார். அவர்கள் இருவரும் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் எனவும் கூறினார்.

ச்ஹ்

 தொடர்ந்து பேசிய அமைச்சர் ரோஜா,   ஆந்திராவை இரண்டாக உடைத்து சந்திரசேகர் ராவ்  இப்போது தனது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்துவிட்டு , ஆந்திராவில் அரசியல் நடத்த துடித்துக் கொண்டிருக்கிறார்.  அரசியல் ரீதியாக அவர் ஆந்திராவில் அடி எடுத்து வைத்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி இருக்கிறார் ஆவேசத்துடன்.