அந்த ஆணவ கொலைகாரர்களுக்கு நாங்கள் ஆதரவாக செயல்பட மாட்டோம் - அசாதுதீன் ஓவைசி

 
ஒ

இஸ்லாமிய பெண்ணும் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞரும் திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் சகோதரர் தனது உறவினருடன் சேர்ந்து தங்கையின் கணவரை நடுரோட்டில் அடித்து  ஆணவக் கொலை செய்திருக்கிறார்.  இந்த செயல் ஹைதராபாத் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.   ஹைதராபாத்தில் நடந்த இந்த ஆணவக் கொலைக்கு  அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

 தெலுங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மர்பல்லி பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜூ.   இந்து மதத்தைச் சேர்ந்த இந்த இளைஞரும் அதே ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஹனபூர் மாவட்டம் கிராமத்தில்  வாழ்ந்து வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சையது அஸ்ரின் சுல்தானாவை காதலித்து வந்துள்ளார்.  இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரிடமும் எதிர்ப்பு இருந்து உள்ளது.  

ஒ

 அதிலும் பெண் வீட்டாரின் தரப்பில் எதிர்ப்பு அதிகம் இருந்திருக்கிறது.   ’’என்னை திருமணம் செய்து கொண்டால் உன்னை கொன்று விடுவார்கள்’’ என்று சொல்லி கவலைப்பட்டு இருக்கிறார் அஸ்ரின் சுல்தானா.  ஆனால்,  ‘’ வாழ்ந்தாலும் உன்னோடு தான் செத்தாலும் உன்னோடு தான்’’ என்று காதலில் உறுதியாக இருந்திருக்கிறார்  நாகராஜூ. இதை அடுத்து கடந்த ஜனவரி 31ஆம் தேதி அன்று இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பு இருந்ததால் சொந்த ஊரை விட்டு வெளியேறி சென்று ஹைதராபாத்தில் சரோர் நகரில் வசித்து வந்துள்ளார்கள்.  ஆனால் கொஞ்சமும் ஆத்திரம் தீராமல் இருந்திருக்கிறார் அஸ்ரின் சுல்தானாவின் சகோதரர் சையது மொபின் முகமது.   இவர் தனது தங்கையும் தங்கையின் கணவரும் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு பழிவாங்க துடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

 அதன்படி கடந்த புதன்கிழமை அன்று தனது உறவினர் மசுத் அகமது உடன் சரோர் நகருக்கு பைக்கில் சென்று இருக்கிறார்.   அங்கே இரவில் தனது மனைவியுடன் பைக்கில் சென்று இருக்கிறார் நாகராஜூ.  

 சரோர் நகரின் முக்கியமான பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் நடுவே நாகராஜு சுல்தானாவுடன் பைக்கில் சென்றபோது இடைமறித்து இருக்கிறார் சையது பொமின் முகமது.  பைக்கை நிறுத்தியதும் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் நாகராஜுவின் தலையில் பயங்கரமாக தாக்கி இருக்கிறார்.

ம்

 இந்த தாக்குதலில் நிலை குலைந்து போன நாகராஜூ சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இருக்கிறார்.  அதன் பின்னும் அவர் மீது தாக்குதல் நடத்திய போது கணவர் மீது தாக்காமல் இருப்பதற்காக அவர் மேல் விழுந்து கிடந்திருக்கிறார் அஸ்ரின் சுல்தானா.  ஆனால் பொபின் முகமது சுல்தானாவை தள்ளிவிட்டு தொடர்ந்து நாகராஜூ மீது கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள்.  இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

 நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.  அந்த பரபரப்பான சாலையில் அத்தனை பேர் இருந்தும் ஒருவர் கூட உதவிக்கு வராததால் இரண்டு பேரும் அவரை  அடித்துக்கொன்றூ விட்டு அங்கிருந்து பைக்கில் சென்று இருக்கிறார்கள்.   தன் கணவரை தாக்கும் போது அவரை தாக்காமல் இருப்பதற்காக சுற்றி இருந்தவர்களிடம் உதவி கேட்டு கெஞ்சி இருக்கிறார் சுல்தானா.   அப்போதும் கூட ஒருவர் கூட முன்வந்து இரண்டு பேரும் தாக்கும்போது தடுக்காமல் இருந்திருக்கிறார்கள்.

ப்

 தாக்குதலை பற்றி மட்டும் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.   இந்த ஆணவக் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.   மாற்று மத பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து,  அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர்,  ’’சரோர் நகரில் நடந்த ஆணவக் கொலையை நாங்கள் கண்டிக்கிறோம் . பெண் விருப்பப்பட்டு  திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.  பெண்ணின் கணவரை கொலை செய்ய பெண்ணின் சகோதரனுக்கு எந்த உரிமையும் இல்லை.   அரசியலமைப்பின் சட்டத்தின்படி இது குற்ற சம்பவம்.  இஸ்லாமிய மதப்படி இது மோசமான குற்றமாகும்.  இந்த சம்பவத்திற்கு வேறு நிறம் கொடுக்கப்படுகிறது.   குற்றவாளியை போலீசார் உடனடியாக கைது செய்யவில்லையா ? குற்றவாளியை போலீசார் உடனடியாக கைது செய்து விட்டனர்.  இந்த கொலைகாரர்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்பட மாட்டோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.