7 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..

 
vote counting centre

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 7  தொகுதிகளில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.  

உத்தரபிரதேசம் மாநிலத்தில்  கோலாகோரக்பூர், மகாராஷ்டிராவில்  அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, ஹரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில்  கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும்  மின்னனு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.  

vote

பதிவான வாக்குகள் இன்று என்னப்படும் என ஏற்கனவெ தேர்தல் அறிவித்திருந்த படி,  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று  வரும் நிலையில்,  முன்னனி நிலவரம் காலை 9 மணி முதல் வெளிவரத் தொடங்கியுள்ளன.  இதில் 93 சதவீதம் வாக்குகள் பதிவான முனுகோடு தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.  தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களின் பதிவான வாக்குகளை எண்ணும்  பணி நடைபெற்று வருகிறது.  முதல் 4  சுற்றுகள்  முடிவில் பாஜக வேட்பாளர்  டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.  

vote

மராட்டிய மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் போட்டியிலிருந்து பாஜக விலகியதால்,   அங்கு உத்தவ்  தாக்கரே கட்சி  வேட்பாளர்  வெற்றி  ஏற்கனவே உறுதியானது.  இந்த தொகுதிகளில்  மிக குறைவாக 31% குறைவான வாக்குகளே  பதிவானது. பீகாரில் பாஜக உறவை துண்டித்து விட்டு, அணி மாறிய நிதிஷ்குமார் -  லாலு பிரசாந்தின் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார.   இந்நிலையில் அங்கு 2  தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.  முதல் சுற்று முடிவில்  லாலு பிரசாத்  தலைமையிலான ஆர்ஜேடி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.  வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுகின்றன.