ஜவஹர்லால் நேருவை பாராட்டிய பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி.. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சி மாறுகிறாரா?

 
வருண் காந்தி

முன்னாள் பிரதமர் நேருவை போலவே, நானும் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறேன் என்று பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் பிலிபிட் மக்களவை தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.வருண் காந்தி. சமீபகாலமாக வருண் காந்தி பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். வேலையின்மை, தேர்வுதாள் கசிவு மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் தனது சொந்த கட்சியை வருண் காந்தி குறிவைத்து தாக்கி வருகிறார். மேலும் அண்மையில், நான் நேருவுக்கும் அல்லது காங்கிரஸூக்கு எதிரானவன் அல்ல என தெரிவித்து இருந்தார். மேலும், 2022 அக்டோபரில் இந்திரா காந்தியை நாட்டின் தாய் என்று வருண் காந்தி தெரிவித்து இருந்தார்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள்  : ராகுல் காந்தி மரியாதை!

இந்நிலையில் தற்போது, முன்னாள் பிரதமரும், தனது பூட்டனாருமான ஜவஹர்லால் நேருவை வருண் காந்தி பேசியுள்ளார். உத்தர பிரதேசத்தில் ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி பேசுகையில் கூறியதாவது:  முன்னாள் பிரதமர் நேருவை போலவே, நானும் ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், பங்களா மற்றும் பிற ஊதியங்களை மறுத்து, சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறேன். 

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயங்கிய மன்மோகன் சிங்.. பராக் ஒபாமா தகவல்

முன்பு ஒரு முறை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை  நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, அரசு செலவில் சம்பளம், பங்களா, கார் எதுவும் வாங்கவில்லை என தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேருவை வருண் காந்தி பாராட்டி பேசியிருப்பது பா.ஜ.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வருண் காந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸில் இணையக் கூடும் என ஊக செய்திகள் வெளியாகி வருகின்றன.