அனைதது பள்ளிகளிலும் வேதம், ராமாயணம் மற்றும் கீதை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.. உத்தரகாண்ட் பா.ஜ.க. அமைச்சர்

 
பகவத் கீதை

உத்தரகாண்டில் அனைத்து பள்ளிகளிலும் வேதம், ராமாயணம் மற்றும் கீதை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்தார்.

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த பா.ஜ.க. அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வேதம், ராமாயணம் மற்றும் கீதை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என உத்தரகாண்ட் கல்வி துறை அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்தார்.

தன் சிங் ராவத்

உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறியதாவது:  புதிய கல்விக் கொள்கையின்படி இந்திய வரலாறு மற்றும் மரபுகளின் அடிப்படையில் மாணவர்களின் பாடத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். வேதபுராணம் மற்றும் கீதையுடன் உள்ளூர் நாட்டுப்புற மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நாட்டிலேயே முதல் மாநிலமாக  உத்தரகாண்ட் விளங்கும்.

ராமாயணம்

விரைவில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, புதிய கல்விக் கொள்கையின் கீழ் உள்ள விதிகள் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டத்தில் உத்தரகாண்ட் இயக்கத்தின் வரலாறு மற்றும் சிறந்த ஆளுமைகளும் கற்பிக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.