முன்பு குற்றத்துக்கு பெயர் பெற்ற கோரக்பூர் நகரம் இப்போது கல்வி மையமாக மாறியுள்ளது.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்

 
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் முன்பு குற்றத்துக்கு பெயர் பெற்றது ஆனால் இப்போது கல்வி மையமாக மாறியுள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதமாக தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கோரக்பூரில் நடைபெற்ற மூன்று நாள் கோரக்பூர் மஹோத்சவ் விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கோரக்பூர் 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்றத்திற்கு ஒத்ததாக இருந்தது ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் புதிய வளர்ச்சியுடன் முன்னேறியுள்ளது என தெரிவித்தார். 

கோரக்பூர்

முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் கூறியதாவது: கோரக்பூர் வளர்ச்சியின் புதிய பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த மாவட்டம் பிரதமர் மோடியின் சிறப்பு ஆசிர்வாதத்தையும் கொண்டுள்ளது. அவரது வழிகாட்டுதலின் கீழ் தேசம் புதிய வளர்ச்சி பயணத்தில் உள்ளது. இந்த வளர்ச்சி பயணத்தில் கோரக்பூரை விட்டுச் செல்ல முடியாது. முன்னர் குற்றங்களுக்கு பெயர் பெற்றது கோரக்பூர் மாவட்டம், தற்போது நான்கு பல்கலைக்கழகங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

மோடி

இப்போது கல்வி, சுகாதாரம், வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்களின் மையமாக மாறி வருகிறது. திரைப்படங்கள் தயாரிப்பதற்கு இது ஒரு பெரிய தளமாகவும் வந்துள்ளது. கோரக்பூர் வாய்ப்புகள் நிரம்பியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.