பெண் பயணி மீது சிறுநீர் கழிப்பு -விமானத்தில் போதை ஆசாமியின் அட்டகாசம்

 
i

விமானத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர்,  பெண் பயணி மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்.  அந்த நபரை விமான பயணத்தடை பட்டியலில் வைக்க ஏர் இந்தியா நிறுவனம்  பரிந்துரை செய்திருக்கிறது.

கடந்த  நவம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்திருக்கிறார்.  அப்போது ஒருவர் போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்து இருக்கிறார் . உணவுக்கு பின்னர் கேபிள் விளக்குகள் அணைக்கப்பட்ட போது அந்த நபர் சிறுநீர் கழித்து இருக்கிறார்.

a

 இதனால் அந்த பெண் பயணியின் காலணிகள்,  உடைகள் சிறுநீரில் நனைந்து இருக்கின்றன.  தனக்கு உடனே பைஜாமாக்கள் இருப்புகள் வழங்கப்பட்ட வேண்டும் என்று கேட்க விமான நிறுவனமும் வழங்கியிருக்கிறது.  

 அந்த ஏர் இந்தியா விமானம் ஜே எஃப் கே அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்திருக்கிறது.  அப்பொழுதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது . இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த பயணி இனி எந்த விமானத்திலும் பயணிக்க முடியாதபடி தடைக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 

 இந்த  விவகாரம் ஆய்வுக் குழு வசம்  இருக்கிறது.  குழுவின் முடிவுக்கு காத்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறது ஏர் இந்தியா.  இந்த விவகாரத்தினால் ஏர் இந்தியா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.