நேரு ஜி போதைப்பொருள் உட்கொண்டார், மகாத்மா காந்தியின் மகனும் போதைப்பொருள் உட்கொண்டார்.. மத்திய அமைச்சர் பேச்சு
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜி போதைப்பொருள் உட்கொள்வார், சிகரெட் புகைப்பார். மகாத்மா காந்தியின் மகன் போதைப்பொருள் உட்கொண்டார் என்று மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் கவுஷல் கிஷோர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கவுஷல் கிஷோர் பேசுகையில் கூறியதாவது: ஜவஹர்லால் நேரு ஜி போதைப்பொருள் உட்கொள்வார், சிகரெட் புகைப்பார். மகாத்மா காந்தியின் மகன் போதைப்பொருள் உட்கொண்டார்.

நீங்கள் படித்தது பார்த்தால் தெரியும். நமது நாடு முழுவதும் போதைப்பொருளின் பிடியில் சிக்கியுள்ளது. போதைப்பொருள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் காரணமாக ஏற்படும் மரணங்கள் மற்றும் பிற மன, உடல்ரீதியான பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு தெரிவித்து, போதைப்பொருளுக்கு எதிரான அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று ஊடகவியலாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இது நடந்தால், விஷ விற்பனை நிறுத்தப்படுவது போல் போதைப்பொருள் விற்பனையும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும், மகாத்மா காந்தியின் மகனையும் போதைப்பொருள் உட்கொள்வார் என்று மத்தியமைச்சர் கவுஷல் கிஷோர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


