முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்க 9 மாநில உள்துறை செயலர்களுக்கு அமைச்சகம் அதிகாரம்

 
மாநிலங்களவை உறுப்பினர்களின் 54 கேள்விகளுக்கு பதில்கள் ரெடி- மத்திய உள்துறை அமைச்சகம்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க 31 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் 9 மாநிலங்களின் உள்துறை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் வழங்கியுள்ளது. 

2021-22ம் ஆண்டிற்கான உள்துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தை சேர்ந்த 1,414 வெளிநாட்டினருக்கு, இந்திய குடியுரிமைச் சட்டம் 1955ன் கீழ் பதிவு அல்லது இயற்கைமயமாக்கல் மூலம் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை பெற்றவர்கள் (கோப்பபடம்)

குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்,டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்களில் இந்திய குடியுரிமை சட்டம் 1955ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டன. குடியுரிமை சட்டம் 1955ன் கீழ், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க 31 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் 9 மாநிலங்களின் உள்துறை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம்

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் 2019ன் கீழ் அல்லாமல், குடியுரிமை சட்டம் 1955ன் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குடியுரிமை திருத்த சட்டம் 2019ன் கீழ் உள்ள விதிகள் அரசாங்கத்தால் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே இதுவரை குடியுரிமை திருத்த சட்டத்தின்கீழ் யாருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.