நிலம் விலை குறைவு, மனித வளம் உள்ளிட்டவை இருக்கு.. மகாராஷ்டிராவில் முதலீடு செய்யுங்க.. டாடாவுக்கு கடிதம் எழுதிய நிதின் கட்கரி

 
ஸ்பீடா போனதற்கு நானே அபராதம் கட்டி இருக்கேன்.. நிதின் கட்கரி தகவல்

மகாராஷ்டிராவில் நிலத்தின் விலை குறைவு, மனித வளம் உள்ளிட்டவை இருக்கு எனவே மாநிலத்தில் முதலீடு செய்யும்படி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் மொத்தம் ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான 4 திட்டங்கள் மகாராஷ்டிராவிலிருந்து வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனையடுத்து ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இந்நிலையில், தனது சொந்தமான மகாராஷ்டிராவில் முதலீடு செய்யும்படி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டாடா

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாக்பூர் (mihan) சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அல்லாத பகுதியில் உள்ள மல்டி மாடல் சர்வதேச விமான நிலையத்தில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஏற்கனவே பல நிறுவனங்கள் அருகாமையில் தளத்தை அமைத்துள்ளன. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர் புராடக்ஸ், வோல்டாஸ், டைட்டன் இண்டஸ்டரீஸ், பிக் பேஸ்கட் போன்ற அனைத்து டாடா குழும நிறுவனங்களும், ஆறு மாநிலங்களில் உள்ள 350 மாவட்டங்களுடன் ஒரே இரவில் இணைப்பது, நிலத்தின் விலை குறைவு, மனித வளம் மற்றும் கிடங்குகள் போன்ற நாக்பூரின் பலத்தை அனுபவிக்கலாம். 

என்.சந்திரசேகரன்

டாடா குழுமத்தின் விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகியவை நாக்பூரை தங்கள் செயல்பாடுகளின் மையமாக மாற்றுவதன் மூலம் செலவைக் குறைக்க முடியும். இரவில் விமானத்தை நிறுத்துவதை தேர்வு செய்ய வேண்டும். டாடா குழுமத்திற்கு நாக்பூரில் ஒரு மையத்தை உருவாக்குவதற்கான காரணம் குறித்து திட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய முயற்சி விதர்பா பகுதியின் விரைவான வளர்ச்சிக்கும், டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கும் உதவும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.