சிவாஜி மகாராஜ் எங்கள் கடவுள். நாங்கள் அவரை எங்கள் பெற்றோரை விட அதிகமாக மதிக்கிறோம்.. மவுனம் கலைத்த நிதின் கட்கரி

 
வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

சத்ரபதி சிவாஜி குறித்த கவர்னர் பகத் சிங் கோஷ்யாரின் கருத்து குறித்து தனது மவுனத்தை கலைத்ததோடு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவை தனது வார்த்தைகளால்  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமாதானம் செய்துள்ளார். 

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், நீங்கள் அவரை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களை காணலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார், பாபாசாகேப் அம்பேத்கர் முதல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம் என தெரிவித்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார் என்று கவர்னர் கூறியதற்கு உத்தவ் தாக்கரே சிவ சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளது. மேலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

சத்ரபதி சிவாஜி

இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியங்கள் ஒருபோதும் வயதாகாது, அவரை உலகில் வேறு எந்த பெரிய மனிதருடன் ஒப்பிட முடியாது என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பா.ஜ.க. தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், மாநிலத்தின் வரலாறு தெரியாத ஒரு நபர் மற்றும் அவர் எப்படி செயல்படுவார்,  வேறு எங்காவது அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

 சஞ்சய் கெய்க்வாட்

இந்த சூழ்நிலையில், சத்ரபதி சிவாஜி குறித்த கவர்னர் பகத் சிங் கோஷ்யாரின் கருத்து குறித்து தனது மவுனத்தை கலைத்ததோடு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவை தனது வார்த்தைகளால்  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமாதானம் செய்துள்ளார். இது தொடர்பாக நிதின் கட்கரி கூறுகையில்,  சிவாஜி மகாராஜ் எங்கள் கடவுள். நாங்கள் அவரை எங்கள் பெற்றோரை விட அதிகமாக மதிக்கிறோம் என தெரிவித்தார்.