உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர ஏற்பாடு செய்து தர இயலாது- ஒன்றிய அரசு

 
students

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பினை தொடர ஏற்பாடுகள் செய்து தர இயலாது எனன்றி ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ கல்வி தொடர  முடியாது... மத்திய அரசு அதிர்ச்சி.

ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் சுமார்  20,000 பேர் இந்தியா திரும்பி உள்ளனர்.  இவர்களை இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி வெளியுறவுத் துறைக்கான மக்களவை குழு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கடந்த 5ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தத போது  தனது நிலைப்பாட்டை  மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கல்வி ஆணையத்திற்கு நீதிபதிகள் நோட்டிஸ் அனுப்பி  வழக்கை இன்று ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் உக்கரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர ஏற்பாடுகளை செய்து தர முடியாது என்று தெரிவித்தார்.  அந்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பினை தொடர தளர்வுகள் செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் தரத்தை பாதிக்கும் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.   வெளிநாடுகளில் படித்த இந்திய மாணவர்கள் அவர்களின் படிப்பை இடையில் இந்திய பல்கலைக்கழகங்களில் தொடரம் முறை "தேசிய மருத்துவ சட்டத்தில்" வழிவகை செய்யப்படவில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.