மகாராஷ்டிரா கவர்னரை திரும் பெறுங்க, தேவைப்பட்டால் அவரை முதியோர் இல்லத்தில் சேருங்க.. மத்திய அரசை வலியுறுத்திய உத்தவ்

 
பகத் சிங் கோஷ்யாரி

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை திரும்ப பெறுங்க, தேவைப்பட்டால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் என்று மத்திய அரசை அம்மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், நீங்கள் அவரை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களை காணலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார், பாபாசாகேப் அம்பேத்கர் முதல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம் என தெரிவித்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ்  குறித்த கவர்னர் பகத் சிங் கோஷ்யாரின் கருத்துக்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

உத்தவ் தாக்கரே

இந்நிலையில் நேற்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா பிரிவின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: அமேசான் வழியாக மகாராஷ்டிராவுக்கு மத்திய அரசு அனுப்பிய பார்சல் இந்த கவர்னர், இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் அவரை திரும்ப அழைத்து செல்லாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் அல்லது பந்த் நடத்தப்படும். நீங்கள் அனுப்பிய சேம்பிளை எடுத்து செல்லுமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறோம். தேவைப்பட்டால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம்.  மாநிலத்தில் அவர்  எங்களுக்கு தேவையில்லை. 

வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

இப்படி நாக்கு தவறுவது ஒவ்வொரு முறையும் நடக்காது. மகாராஷ்டிரா அமைதியாக உட்காராது என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,  சிவாஜி மகாராஜ் எங்கள் கடவுள். நாங்கள் அவரை எங்கள் பெற்றோரை விட அதிகமாக மதிக்கிறோம் என தெரிவித்தார்.