காஷ்மீர் என்கவுண்டர் - இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

 
kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவாலை அடுத்து நவ்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நவ்காம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை  பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.