கேரளாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

 
kerala boat

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் படகு போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் மாயமான நிலையில், அவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

கேரள மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டம் ஆறமுள்ளா பகுதியில் படகு போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து படகுகள் அங்கு விரைந்துள்ளன. இதேபோல் இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆலப்புழா அருகே சென்னித்தலா பகுதியில் இருந்து ஒரு படகு ஆற்றில் புறப்பட்டு சென்றுள்ளது. 15க்கும் மேற்பட்டோர் அந்த படகில் துடுப்புப்போட்டபடி சென்ற நிலையில், ஆற்றில் அதிகளவிலான தண்ணீர் வந்துகொண்டிருந்ததால் படகு திடீரென ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்ட நிலையில், 4 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்க முடியாததால் தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியா சம்பவ இடத்திற்கு படகில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான 4 பேரில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கனமழை காரணமாக ஆற்றில் அதிகளவிலான தண்ணீர் வந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் படகு ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.