இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் குதித்து தற்கொலை

 
w


 இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் தாய்.  கர்நாடக மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அவலம். 

 கர்நாடக மாநிலத்தில் துமக்கூரு மாவட்டத்தில் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொலாலே என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா.     இவரின் கணவர் சாந்தகுமார்.    இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகின்றன .

இத்தம்பதிக்கு 9 வயதில் ஹேமா என்ற மகளும்,   7 வயதில்  சேகர் என்ற மகனும் இருந்துள்ளார்கள்.   புஷ்பலதாவுக்கும்,  சாந்தகுமாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.    இந்த குடும்ப பிரச்சினை அதிகமாகவே கடந்த இரண்டு வருடங்களாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  புஷ்பலதா உடன் இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து வந்திருக்கின்றனர்.

lg

 இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையினால் மன உளைச்சலில் இருந்த புஷ்பலதா உறவினர் வீட்டுக்கு செல்வதாக அக்கம் பக்கத்தினரிடம் சொல்லிவிட்டு கிராமத்தின் அருகே இருக்கும்  கிணற்றுக்கு  மகளையும் மகனையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.   அங்கே கிணறுக்கு ஓரம் சென்றதும் மகளையும் மகனையும் கிணற்றுக்குள் பிடித்து தள்ளிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 உடல்கள் மிதப்பதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு  தகவல் சொல்ல போலீசார் விரைந்து வந்து மூன்று பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினரின் உதவியுடன் மீட்டுள்ளனர்.   பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

 மூன்று பேரின் மரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,   கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் தனது பிள்ளைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து இருக்கிறார் புஷ்பலதா என்பது தெரிய வந்திருக்கிறது.   ஆனால் புஷ்பலதாவின் தற்கொலைக்கும் பிள்ளைகளை மரணத்திற்கும்  இந்த பிரச்சனை தான் காரணமா என்பது  இன்னும் உறுதியாக வில்லை .  போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.