சபரிமலையில் இரண்டு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு!!

 
death

சபரிமலையில் 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sabarimala
சபரிமலை ஐயப்பன்  கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். தற்போது மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடைபெறவுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

sabarimala
இந்நிலையில் சபரிமலையில் யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். விருதுநகரை சேர்ந்த முருகன்(62), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கன்னியப்பன் (74) ஆகியோர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.