இன்ஸ்டா ரீல்ஸ் போதை- ரயில் மோதி உயிரிழந்த இளைஞர்

 
death

இன்ஸ்டாவில் பதிவு செய்ததற்காக வேகமாக செல்லும் ரயில் முன்பு நடந்து செல்வது போன்று வீடியோ எடுத்த இளைஞரை ரயில் மோதியதில் சுருண்டு விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவில் டிக் டாக் மோகத்தால் வேகமாக செல்லும் ரயில் முன்பு வீடியோ எடுக்க மூயன்று இளைஞர் சுருண்டு விழுந்தார். ஹனுமகொண்டா மாவட்டம் வட்டேபள்ளியைச் சேர்ந்த அஜய் பிளஸ் 1 படித்து வருகிறார்.  ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால், அஜய் தனது நண்பர்களுடன் வட்டேபள்ளி ரயில் பாதைக்கு சென்று ஓடும் ரயிலின் முன் நின்று தனது நண்பர்களை டிக் டாக் வீடியோ எடுக்கும்படி வற்புறுத்தினார். இதற்காக காஜிபேட்டையில் இருந்து மஞ்சிரியாலா நோக்கி ரயில் வேகமாக சென்று கொண்டுருந்த போது  ரயில் வருவதற்கு முன்பு ரயில் தண்டவாளம் அருகே நின்று கொண்டு ரயில் அருகில் நெருங்கி வந்தபோது அஜய் நடந்து வருவது போன்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். நண்பர்கள் வேண்டாம் என கூறியும் கேட்காமல், கட்டாயப்படுத்தி நண்பர்களை வீடியோ எடுக்கச் சொன்னார்.

இதனால் நண்பர்களும்  வீடியோ எடுத்து கொண்டுருந்த போது, ​​வேகமாக வந்த ரயில் அஜய் மீது பலமாக மோதியது.  இதில் அஜய் சுருண்டு விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக நண்பர்கல் ரயில்வே காவலர் உதவியுடன் 108  ஆம்புலன்சில் எம்ஜிஎம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 24 மணி நேரம் கடந்த பிறகு அஜய் உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசும், போலீசார் பலமுறை  எச்சரிக்கை செய்தாலும், விளம்பர படுத்தினாலும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவை வைரல் செய்வதற்காக விதவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு தங்கள் உயிரை பலி கொடுக்கும் நிலைக்கு செல்கின்றனர்.