நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

 
neet pg

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

neet

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு,  தேர்வு மருத்துவ படிப்புக்கு தேசிய தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது.  அந்த வகையில் நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்  செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  அனைத்து விண்ணப்பதாரர்களும்,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

neet-s4

இந்நிலையில் வரும் நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு  பெறுகிறது.  நீட் தேர்வுக்கு கடந்த ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.