காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 
Tomorrow school leave

காரைக்காலில் நடைபெற்று வரும் கார்னிவல் திருவிழா காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

karaikal

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.  பொங்கல் பண்டிகை ஒட்டி விடுமுறை நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில்  பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழந்தது. ஆனால் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

school

இந்நிலையில் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் கார்னிவல் நிறைவு விழாவையொட்டி இன்று விடுமுறை என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  காரைக்காலில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கார்னிவல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  நேற்று இதன் ஒரு பகுதியாக குதிரைகள்,  மாடுகளுக்கான ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.